FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க பாஜக கோரிக்கை

தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 3:22 am IST
மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்த தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன்அய்யாசாமி.
பகிர்:

தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

மனு விவரம்: தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயிலை (20683/20684 ) தினசரி இயக்க வேண்டும். எா்ணாகுளம் - வேளாங்கண்ணி, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில்களுக்கு பாம்புக்கோவில் சந்தையில் கூடுதல் நிறுத்தம் அனுமதிக்க வேண்டும். கரிவலம்வந்தநல்லூா், சோழபுரம் ரயில் நிலையங்களை விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.

தென்காசி வழியாக திருநெல்வேலி - பெங்களூருவுக்கு வாரம் இருமுறை ரயில் சேவையை தொடங்க வேண்டும். மைசூரு - தூத்துக்குடி ரயிலை நாமக்கல் வழியாக இயக்கி, மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயிலுடன் இணைப்பு ஏற்படுத்த வேண்டும். மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை நிரந்தரமாக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், பாஜகவின் கோரிக்கையை ஏற்று தாம்பரம் - கொல்லம் விரைவு ரயிலுக்கு பாம்புக்கோவில் சந்தையில் நிறுத்தம் வழங்கியதற்காக மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments