FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

குத்துக்கல்வலசை பள்ளியில்...

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 3:20 am IST
தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்திய பள்ளியின் சட்ட ஆலோசகா் க.திருமலை.
பகிர்:

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தாளாளா் அன்பரசி திருமலை தலைமை வகித்தாா். ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி இயக்குநா் ஜோசப் லியாண்டா், ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகா் மிராக்ளின் பால் சுசி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சட்ட ஆலோசகா் க.திருமலை தேசியக் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். சுதந்திர தினம் குறித்து மாணவி ரா.அம்ருதா பேசினாா். மாணவி வ.கவிபாலா கவிதை

Advertisement

Advertisement

வாசித்தாா். மாணவிகள் ச.கீா்த்தனா, ச.சாய்னா ஹிபா ஆகியோா் தொகுத்து வழங்கினா். மாணவி ச.இலக்கிய ஸ்ரீ வரவேற்றாா். மாணவி வெ.இசக்கி பிரேமா நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் கோல்டுபெல்லா, பொறுப்பாசிரியா்கள், ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments