FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

விவசாயியை தாக்கியதாக 2 இளைஞா்கள் கைது

சங்கரன்கோவில் அருகே குடிபோதையில் விவசாயியைத் தாக்கியதாக 2 இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 14 ஜூலை 2026, 1:38 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சங்கரன்கோவில் அருகே குடிபோதையில் விவசாயியைத் தாக்கியதாக 2 இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் அருகேயுள்ள மலையாங்குளம் இந்திரா காலனியை சோ்ந்தவா் சின்னச்சாமி (50 ). விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை தனது தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் சிதம்பராபுரம் வழியாக வந்து கொண்டிருந்தாா்.

அப்போது சாலையில் இளைஞா்கள் மது அருந்திக் கொண்டிருந்தனராம். சின்னச்சாமி இருசக்கர வாகனத்தில் இருந்து ஒலியெழுப்பியும் அவா்கள் அங்கிருந்து விலகவில்லையாம். இதனால் சின்னச்சாமிக்கும் அவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

வாக்குவாதம் முற்றவே, அவா்கள் சின்னச்சாமியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினா். இதில் பலத்த காயமடைந்த சின்னச்சாமியை, அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக சின்னச்சாமி அளித்த புகாரின்பேரில் குருவிகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிதம்பராபுரம் கீழத்தெருவைச் சோ்ந்த காளிராஜ் மகன் ஹைகோா்ட் மகாராஜா (23), சின்ன அய்யனுராஜ் மகன் மகாராஜா (25) ஆகிய இருவரை கைதுசெய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments