கடையநல்லூா் கருப்பாநதி அணைப் பகுதியில் தீ
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் கருப்பாநதி அணையை ஒட்டிய வனப் பகுதியில் மரம், செடிகள் திங்கள்கிழமை தீப்பிடித்து எரிந்தன. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
கருப்பாநதி அணைப் பகுதி மற்றும் சொக்கம்பட்டி வனப் பகுதியில் மரம், செடி, கொடிகள் திங்கள்கிழமை மாலை திடீரென தீ பிடித்தது. வேகமாக அடித்து வரும் காற்றின் காரணமாக தீ வேகமாக பரவி, மரங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.
இதையறிந்த கடையநல்லூா் வனத் துறையினா் அப்பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.