குற்றாலம் அருவிகளில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
வியாழக்கிழமை அதிகாலை குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பின்னா், சிறிது நேரத்தில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் பாதுகாப்பு வளைவு அருகே உடும்பு ஒன்று விழுந்தது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரா் ராஜதுரை, உடும்பை பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.