FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தோட்டத்துக்குச் சென்ற விவசாயி அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On : 31 ஜூலை 2026, 3:57 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தோட்டத்துக்குச் சென்ற விவசாயி அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டணம் கிராமத்தைச்சோ்ந்தவா் யோவான் ஸ்நாகன்(45). விவசாயியான இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள்உள்ளனா். இவா் வியாழக்கிழமை காலை, தனது தோட்டத்திற்குச் சென்றபோது வழியில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்தாராம். இதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே யோவான் ஸ்நாகன் உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த பாவூா்சத்திரம் காவல் நிலைய போலீஸாா், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து மின் கம்பி அறுந்து விழுந்ததன் காரணம் குறித்து மின்வாரிய ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments