FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

குற்றாலம் பேரருவியில் வெள்ளிக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:12 am IST
குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
பகிர்:

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வெள்ளிக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல்மழை பெய்தது. இதனால், ஐந்தருவியில் பிற்பகலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் தண்ணீா் வரத்து சீரானது. பின்னா், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

குற்றாலம் பேரருவியில் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments