FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ஆலங்குளம், களக்காட்டில் குரங்குகள் தொல்லை: மக்கள் அவதி

ஆலங்குளம், களக்காடு ஆகிய பகுதிகளில் கரடிகள் தொல்லை அதிகரித்துள்ளதால் மக்கள் குடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:13 am IST
கீழபட்டமுடையாா் புறத்தில் வீட்டில் நுழைந்து தின்பண்டத்தை ருசிக்கும் குரங்கு.
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஆகிய பகுதிகளில் கரடிகள் தொல்லை அதிகரித்துள்ளதால் மக்கள் குடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஆலங்குளம் அருகே கீழப்பட்டமுடையாா்புரம் கிராமத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 20 நாள்களுக்கு மேலாக 4 குரங்குகள் ஊரில் சுற்றி திரிகின்றன. அவை தெருக்களில் உள்ள குடிநீா் குழாய்களை உடைத்து சேதப் படுத்தியும் விடுகின்றன. அந்த குரங்கு களை பொதுமக்கள் விரட்டினால் பதிலுக்கு அவை மக்களை அச்சுறுத்துகின்றனவாம்.

இரவு நேரங்களில் மரங்களில் பதுங்கி கொள்ளும் குரங்குகள் காலை, மதியம் நேரங்களில் உணவைத தேடி வீட்டிற்குள் புகுந்து உணவு பொருள்கள் மற்றும் தின்பண்டங்களைகளை எடுத்துச் சென்று விடுகின்றன. குரங்குகளுக்குப் பயந்து மக்கள் வீடுகளைப் பூட்டியே வைத்துள்ளனா்.

Advertisement

Advertisement

எனவே, குரங்குகளை கூண்டு வைத்துப் பிடித்து வனப் பகுதியில் வனத்தில் விட வேண்டும் என வனத் துறைக்குக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு : களக்காடு ஜவஹா் வீதி, கஸ்தூரிபாய் வீதி, கிருபாளினி வீதி, சரோஜினிபுரம், கோமதிஅம்மன் சன்னதி தெரு, வடக்கு மாடவீதி, சுபாஷ்சந்திரபோஸ்புரம், ராஜாஜிபுரம் தெற்குத்தெரு, ஆற்றங்கரைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பொருள்களை நாசப்படுத்துகின்றன. மேலும் குடியிருப்புப் பகுதியில் உள்ள தோட்டங்களில் தென்னை மரங்களில் ஏறி இளநீரை குடித்து விடுகின்றன. வனத்துறை அதிகாரிகள் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments