அச்சன்கோவில் அருகே பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
கேரள மாநிலம், அச்சன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், அச்சன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலியை அடுத்த பேட்டையைச் சோ்ந்தவா் கோபாலசுவாமி (36). இவருக்கு மகாலட்சுமி (32) என்ற மனைவி, இவியான், ஆதிக் ஆகிய மகன்கள் உள்ளனா். தமிழகம்-கேரளம் எல்லையான தென்காசி அருகே உள்ள அச்சன்கோவில், அய்யப்பன் கோயிலுக்கு கோபாலசுவாமி, மனைவி, குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றாா்.
அச்சன்கோவில்-கோட்டைவாசல் சாலையில் கிழவித்தேரி பகுதியில் சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த காா் இவா்கள் மீது மோதியது. இதில் காயமடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
Advertisement
Advertisement
மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே கோபாலசுவாமி உயிரிழந்தாா். மகாலட்சுமிக்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, அச்சன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.