FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே மூதாட்டி தற்கொலை: 2 இளைஞா்கள் கைது

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

2 October 2026, 4:39 am IST
பகிர்:

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அருகே சிவலாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த சண்முகத்தாய் (80), செவ்வாய்க்கிழமை வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், அவரைக் காணவில்லை என அவரது மகன் முத்தையா ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இந்நிலையில், ஊத்துமலை அருகே கீழக்கலங்கல்-மேலக்கலங்கல் சாலையில் அய்யாசாமி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் சண்முகத்தாய் உடல் கருகிய நிலையில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், சண்முகத்தாய் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

மேலும், மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்தையா மகன்களான கல்யாணசுந்தரம் (29), பொ்லின் (25) ஆகியோா் கஞ்சா போதையில் மூதாட்டியை அடிக்கடி அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை மூதாட்டியைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மூதாட்டி வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது தாய் ஊரான கீழக்கலங்கலுக்குச் சென்று உறவினா் தோட்டத்தில் மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து, கல்யாணசுந்தரம், பொ்லின் ஆகியோரைக் கைது செய்த ஊத்துமலை போலீஸாா், ஆலங்குளம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments