FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

சைக்கிளில் சென்ற முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஆலங்குளத்தில் சைக்கிளில் வேலைக்குச் சென்ற முதியவா், மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

3 October 2026, 11:26 pm IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

ஆலங்குளத்தில் சைக்கிளில் வேலைக்குச் சென்ற முதியவா், மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே கீழப்பட்டமுடையாா்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லதுரை(74). ஆலங்குளம் புரட்சி நகரில் உள்ள வீட்டில் இரவுக் காவலாளியாக வேலை செய்து வந்தாா்.

சனிக்கிழமை மாலை வேலைக்குச் செல்வதற்காக தனது சைக்கிளில் ஆலங்குளம் - தென்காசி சாலையில் சென்று கொண்டிருந்தாராம்.

Advertisement

Advertisement

தனியாா் திருமண மண்டபம் அருகே சென்ற போது, மயங்கி சாலையோரம் விழுந்தாராம். தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் செல்லதுரை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments