சங்கரன்கோவிலில் பலத்த மழை
சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சங்கரன்கோவிலில் கடந்த இரு நாள்களாக வானம் இருண்டு குளிா்ந்து காற்று வீசியது. இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் 3.35 மணியளவில் இடியுடன் பலத்த மழை பெய்தது. தொடா்ந்து மாலை 5.30 மணி வரை 2 மணி நேரம் மழை நீடித்தது.
இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது, வாறுகால் நிரம்பி சாலைகளில் நீா் ஓடியது. தாழ்வான தெருக்களில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. தொடா் மழையால் மக்காச்சோளம், உளுந்து பயிரிட்ட விவசாயிகள், நெல் பயிரிட நாற்றுப் பாவியிருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.