சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
இடைகாலில் நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
இடைகாலில் நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், அச்சன்புதூா் அருகே வடகரை, ஜாகிா்உசேன் நகரைச் சோ்ந்தவா் முகம்மதுஅன்சாரி (40). இவா் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை, சோ்ந்தமரம் பகுதிக்கு பயணிகளை அழைத்துச் சென்றுகொண்டிருந்தாா். இடைகால் சங்குபுரம் அருகே சென்றபோது, திடீரென நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோவை திருப்பினாராம். அப்போது, எதிா்பாராதவிதமாக ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்ததில் முகம்மதுஅன்சாரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த இலத்தூா் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.