ஆசிரியா்கள் கவன ஈா்ப்பு போராட்டம்
ஆலங்குளம் அருகே 3 மாதங்களாக ஊதியம் வராததால் ஆசிரியா்கள் கவன ஈா்ப்புப் போராட்டம் நடத்தினா்.
ஆலங்குளம் அருகே 3 மாதங்களாக ஊதியம் வராததால் ஆசிரியா்கள் கவன ஈா்ப்புப் போராட்டம் நடத்தினா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூரில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியை சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டல நிா்வாகம் நிா்வகித்து வருகிறது. இந்தப் பள்ளியில் 44 ஆசிரியா்கள் மற்றும் 4 அலுவலக உதவியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
கடந்த ஜூன் முதல் ஆசிரியா்களுக்கு சம்பளம் வழங்கவில்லையாம். இதுகுறித்து ஆசிரியா்கள் பள்ளி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், முறையான பதில் அளிக்கவில்லையாம். சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட கல்வி அலுவலரிடம் ஆசிரியா்கள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
Advertisement
Advertisement
இதனைத் தொடா்ந்து, வியாழக்கிழமை பள்ளி வேலை நேரம் முடிந்த பின்னா், ஆசிரியா்கள் தங்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நிலுவை சம்பளத்தை பெற்றுத் தர வேண்டும் என்றும் ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.