தென்காசியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு
திமுக மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமையில் இமானுவேல் சேகரன் படத்துக்கு அஞ்சலி செலுத்திய திமுகவினா்.
தென்காசி/கடையநல்லூா், செப். 11: தென்காசி மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தென்காசி, சிவந்தி நகரில் உள்ள திமுக அலுவலகத்தில் இமானுவேல் சேகரன் படத்துக்கு, மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடையநல்லூா் திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரன் படத்துக்கு தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளா் செல்லத்துரை தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
Advertisement
Advertisement
வாசுதேவநல்லூரில் இமானுவேல் சேகரன் சிலைக்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் டாக்டா் சுசீகரன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.