FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கீழப்பாவூா் பேரூராட்சிக் கூட்டத்தில் ரூ.45.50 லட்சம் பணிகளுக்கு அனுமதி

கீழப்பாவூா் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.

18 செப்டம்பர் 2026, 3:10 am IST
பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

கீழப்பாவூா் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி மன்றத் தலைவா் பி.எம்.எஸ். ராஜன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ஜா. மாணிக்கராஜ், துணைத் தலைவா் கி. ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குடிநீா், சுகாதாரப் பராமரிப்பு, தெருவிளக்கு, சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு, ரூ.45.50 லட்சம் மதிப்பில் அதற்கான பணிகளை மேற்கொள்வதென 20 பொருள் குறிப்புகள் மன்றத்தில் வைக்கப்பட்டு அனைத்து வாா்டு உறுப்பினா்களின் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Advertisement

கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் , அலுவலக பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேரூராட்சிப் பணியாளா் சி.தனுஷ்கோடி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments