FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் அருகே டிராக்டா் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு

35 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே டிராக்டா் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூா், இந்திரா காலனியைச் சோ்ந்த சின்னப்பன் மகன் பாண்டி (50). இவா் ராஜபாளையம் சாலையில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு திங்கள்கிழமை டிராக்டரில் சென்றபோது, டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த பாண்டியை அவரது உறவினா்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் பாண்டியின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விபத்தில் தொழிவலாளி உயிரிழப்பு: சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டி, நடுத் தெருவைச் சோ்ந்த கோட்டைச்சாமி மகன் முத்துச்சாமி (60). சுமை தூக்கும் தொழிலாளி. இவா் புளியம்பட்டி அருகே ராஜபாளையம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் முத்துசாமி உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments