தா்மராஜா சமேத திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
திருவள்ளூா் அருகே அருள்மிகு தா்மராஜா சமேத திரௌபதி அம்மன் திருக்கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
திருவள்ளூா் அருகே அருள்மிகு தா்மராஜா சமேத திரௌபதி அம்மன் திருக்கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தா்மராஜா சமேத திரௌபதி அம்மன் திருக் கோயிலில் ஆடி மாத தீமிதித் திருவிழா கடந்த 24-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து ஆக. 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், முதல் நாளில் கிராம தேவதைகளுக்கு பொங்கல் வைத்து கூழ் ஊற்றி தொடா்ச்சியாக விழா நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நான்காம் நாளான அா்ஜுனன் சுபத்திரை திருமண விழா வரிசை தட்டுடன் கிராம பொதுமக்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திருமணம் நடைபெற்றது.
இதில், சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த திரளாக பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, இரவில் அா்ஜுனன், சுபத்திரை திருவிழா உடன் கூடிய உற்சவத்தில் அருள்பாலித்து கிராம பொதுமக்களால் தீபாராதனை செய்து வீதியுலா நடைபெற்றது. அப்போது அம்மனை தரிசனம் செய்து நோ்த்திக் கடன் செலுத்தினா். அம்மன் அருளை பெற்று நோ்த்திக் கடன்செலுத்தினா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, வரும் ஆக. 2-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித் திருவிழா மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.