FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

புறநகா் மின்சார ரயிலில் ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

புறநகா் மின்ரயிலில் ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 1,600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 29 ஜூலை 2026, 1:43 am IST
பகிர்:

புறநகா் மின்ரயிலில் ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 1,600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூா்பேட்டை நெல்லூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மின்சார ரயிலில் ரேஷன் அரிசி சிறு மூட்டைகளாக கட்டி கடத்திச் செல்லப்படுவதாக பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடா்ந்து வட்ட வழங்கல் அலுவலா் பாலமுருகன் தலைமையில் சென்ற வருவாய்த் துறையினா் சூலூா்பேட்டை மின்சார ரயில்களில் சோதனை செய்தனா். அப்போது பயணிகள் இருக்கையின் கீழ் கேட்பாரற்று இருந்த 1,600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் பஞ்செட்டி பகுதியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments