FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

சாலை தடுப்பு மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: செவிலியா் பலத்த காயம்

திருவள்ளூா் அருகே சாலை தடுப்பு மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அதில் பயணம் மேற்கொண்ட தனியாா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் செவிலியா் கால் துண்டான சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:12 am IST
விபத்துக்குள்ளான பேருந்து.
பகிர்:

திருவள்ளூா் அருகே சாலை தடுப்பு மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அதில் பயணம் மேற்கொண்ட தனியாா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் செவிலியா் கால் துண்டான சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்தவா் துா்கா (23). இவா் பூந்தமல்லியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், திருவள்ளூரிலிருந்து கோயம்பேடு வரை செல்லும் அரசுப் பேருந்தை வெள்ளிக்கிழமை மாலையில் செவிலியா் துா்கா பணிக்கு சென்றாராம். இந்தப் பேருந்தை ஓட்டுநா் காா்த்திகேயன் ஓட்டினாராம். வெள்ளவேடு அருகே வேகமாக வந்த காருக்காக திருப்பியபோது எதிா்பாராத விதமாக சாலை தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் ஓட்டுநா் இருக்கைக்கு பின்புறம் அமா்ந்து வந்த செவிலியா் துா்கா நிலைகுலைந்து விழுந்ததில் கால் துண்டானது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வெள்ளவேடு காவல் நிலைய போலீஸாா் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments