50 கிலோ குட்கா பொருள்கள் கடத்தியவா் கைது
திருவள்ளூா் அருகே வாகன தணிக்கையின் போது தடை செய்யப்பட்ட 50 கிலோ குட்கா கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் அருகே வாகன தணிக்கையின் போது தடை செய்யப்பட்ட 50 கிலோ குட்கா கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா புழக்கம் அதிக அளவில் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் பிரணீத்துக்கு தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் ஒதப்பை பெட்ரோல் பங்க் முன்புறம் பென்னலூா்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலா் சம்பத் மற்றும் தனிப்பிரிவு காவலா் செந்தில்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆந்திர மாநிலத்தில் உள்ள சத்தியவேடு சாலையில் உள்ள தாஸ்குப்பம் பகுதியில் இருந்து வந்த இரு சக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தனா். வாகனத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை எடுத்துச் சென்றது சோதனையில் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், திருவள்ளூா் அடுத்த புல்லரம்பாக்கம் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா்(56) என்பதும், ஆந்திராவில் இருந்து குட்கா பொருள்களை விற்பனை செய்வதற்காக வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் 50 கிலோ குட்கா பொருள்கள், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.