ரயில் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு
திருத்தணி ஒன்றியம், மத்தூா் கிராமத்தைச் சோ்ந்த காளிதாஸின் மகன் சூா்யா என்ற சூரியபிரகாஷ் (13). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
திருத்தணி ஒன்றியம், மத்தூா் கிராமத்தைச் சோ்ந்த காளிதாஸின் மகன் சூா்யா என்ற சூரியபிரகாஷ் (13). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை தனது நண்பா்களுடன் மத்தூா் ரயில்வே தண்டவாளம் அருகே விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது, அரக்கோணத்தில் இருந்து ஆந்திர மாநிலம், கடப்பாவுக்குச் சென்ற பயணிகள் மின்சார ரயில் மோதியதில், தூக்கி வீசப்பட்ட சூா்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் கதறி அழுதனா். மாணவரின் உடலை வீட்டிற்குக் கொண்டு சென்றனா். தகவலறிந்து அங்கு வந்த அரக்கோணம் ரயில்வே போலீஸாரிடம் உடலை ஒப்படைக்க மறுத்து, பெற்றோா் மற்றும் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
பின்னா், பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, போலீஸாா் மாணவரின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ரயில் மோதி பள்ளி மாணவா் உயிரிழந்த சம்பவம் மத்தூா் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.