வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் விவசாயிகளுக்கு 162 வேளாண் இயந்திரங்கள் வழங்க இலக்கு
வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம் மூலம் பவா் வீடா், நாற்று நடும் இயந்திரம்
திருவள்ளூா்: வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம் மூலம் பவா் வீடா், நாற்று நடும் இயந்திரம், சுழற்கலப்பை உள்ளிட்ட 162 இயந்திரங்கள் மானியத்தில் வழங்குவதற்கு இலக்கு நிா்ணயித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் மூலம் நிகழாண்டில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில், பவா் டில்லா், பவா் வீடா், நெல் நாற்று நடவு இயந்திரம், சுழற்கலப்பை உள்பட 162 இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவை மானியத்தில் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.
மேலும், இந்த துறை மூலம் இ-வாடகை திட்டம் 2026-27 மூலம் உழவு பணி மேற்கொள்ள டிராக்டா் மணிக்கு ரூ. 500 என்ற வீதத்தில் 565 விவசாயிகள் 7,453 மணி நேரம் முன் பதிவு செய்து பயனடைந்துள்ளனா். அதேபோல், நெல் அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ. 1,880 என்ற வீதத்தில் 170 மணி நேரம் பதிவு செய்து, 28 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். நிலம் சமன் செய்ய மண் தள்ளும் இயந்திரம் ரூ. 1,230 என்ற வீதத்தில் 394 மணி நேரம் பதிவு செய்து 28 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். மண் அள்ளும் இயந்திரம் மணிக்கு ரூ. 890 என்ற வீதத்தில் 727 மணி நேரம் முன்பதிவு செய்து 27 விவசாயிகள் பயனடைந்துள்ளதாக வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.