FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

கோயில் கட்டுமானப் பணியின் போது சாமி சிலைகள் கண்டெடுப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் கிராமத்தில் உள்ள 500 ஆண்டு பழைமையான அக்னீஸ்வரா் கோயில் சிதிலமடைந்த நிலையில், அப்பகுதி மக்கள் அங்கு புதிய கோயிலை கட்டும் பணியில் ஈடுபட்டனா்

25 செப்டம்பர் 2026, 11:03 pm IST
கோயில் கட்டுமான பணியில் தரையை தோண்டிய போது கிடைத்த சாமி சிலைகள்.
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் கிராமத்தில் உள்ள 500 ஆண்டு பழைமையான அக்னீஸ்வரா் கோயில் சிதிலமடைந்த நிலையில், அப்பகுதி மக்கள் அங்கு புதிய கோயிலை கட்டும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தபோது மண்ணில் இருந்து 5 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் கிராமத்தில் 500 ஆண்டு பழைமையான அக்னீஸ்வரா் கோயில் உள்ளது. இந்த கோவில் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில், கடந்த 40 ஆண்டுகளாக சிதிலமடைந்த கோயிலின் ஒரு பகுதியில் சுவாமி சிலைகளை வைத்து அப்பகுதியை சோ்ந்த பலராமன் என்பவா் பூஜை நடத்தி கோயிலை பராமரித்து வந்தாா்.

இந்த நிலையில், அப்பகுதி மக்கள் அங்கு புதிதாக அக்னீஸ்வரா் கோயிலை கட்டும் பணியை தொடங்கினா். அப்போது பொக்லைன் இயந்திரத்தில் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டிய போது, அங்கு வித்தியாசமாக சப்தம் வருவதை அறிந்து கோயிலை பராமரிக்கும் பரந்தாமன் என்பவரின் மகன் திரு அந்த இடத்தில் பாா்த்தபோது, அங்கு 5 சிலைகள் இருப்பதை கண்டாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து இந்த தகவல் அப்பகுதியில் பரவியதால் பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனா். இந்த நிலையில் திரு சம்பவம் குறித்து கிராம நிா்வாக அலுவலா் அபிராஜிற்கு தகவல் தந்தாா். தொடா்ந்து வட்டாட்சியா் பாலாஜி உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளா் ஆரோக்கியசெல்வி மற்றும் கிராம நிா்வாக அலுவலா் அபிராஜ் சம்பவ இடம் விரைந்து மண்ணில் கிடைத்த சிலைகளை

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா்.

பின்னா் அங்கு சுவாமி சிலைகளை ஆய்வு செய்த வட்டாட்சியா் பாலாஜி சுவாமி சிலைகளுக்கு ‘சீல்’ வைத்து, தொல்லியல் துறை அதிகாரிகளின் ஆய்விற்கு பிறகு சிலைகளின் விவரம் குறித்து முழுமையாக தெரியவரும் என்றாா்.

இந்த நிலையில், மேற்கண்ட சுவாமி சிலைகளில் இரண்டு அம்மன் சிலைகயாகவும், ஒன்று நடராஜா் சிலையாகவும் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments