முகப்பு
வணிகம்

ஸ்விக்கி பங்கு 4 சதவிகிதத்திற்கும் மேலாக சரிவு!

முதலீட்டாளர்களுக்கான ஒரு மாத லாக்-இன் காலம் காலாவதியானதை அடுத்து, லாபத்தை முன்பதிவு செய்ய முயன்றபோது, உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் பங்குகள் இன்று 4 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தது.

Updated On : 11 டிசம்பர் 2024, 7:37 pm IST
ஸ்விக்கி
பகிர்:

புதுதில்லி: முதலீட்டாளர்களுக்கான ஒரு மாத லாக்-இன் காலம் காலாவதியானதை அடுத்து, லாபத்தை முன்பதிவு செய்ய முயன்றபோது, உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் பங்குகள் இன்று 4 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையில், நிறுவனத்தின் பங்கு 4.46 சதவிகிதம் சரிந்து ரூ.519.50 ஆக முடிவடைந்தது. அதே வேளையில் மும்பை பங்குச் சந்தையில் ஸ்விக்கியின் பங்கு விலையானது 3.84% குறைந்து ரூ.522.70 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு; ஐ.டி. மற்றும் ஆட்டோ பங்குகள் ஏற்றம்!

Advertisement

Advertisement

லாக்-இன் காலாவதியானதைத் தொடர்ந்து, முதலீட்டாளர் ஆங்கர் உடைய 6.5 கோடி ஸ்விக்கி பங்குகள் இன்று முதல் வர்த்தகம் செய்ய தகுதி ஆன நிலையில், மீதமுள்ள 50 சதவிகித பங்குகளின் லாக்-இன் காலம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று தெரியவந்துள்ளது.

இன்று ஸ்விக்கியின் 1.43 கோடி பங்குகள் என்.எஸ்.இ-யில் வர்த்தகமான நிலையில், 6.51 லட்சம் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் கைமாறியது.

கடந்த மாதம், ஸ்விக்கி பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டபோது கிட்டத்தட்ட 17 சதவிகித பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments