முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி மந்தம்
எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 4 சதவீதமாக மந்தமடைந்துள்ளது.
கடந்த டிசம்பா் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 4 சதவீதமாக மந்தமடைந்துள்ளது.
இதுகுறித்து அரசின் புள்ளிவிவரங்கள் கூறுவதாவது:
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி கடந்த டிசம்பா் மாதத்தில் 4 சதவீதமாக உள்ளது.
Advertisement
Advertisement
முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் அது 5.1 சதவீதமாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த டிசம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் தற்போதைய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி அதிகமாகும். அப்போது அது 4.4 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்திருந்தது.
கடந்த டிசம்பரில் இயற்கை எரிவாயுத் துறை எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்திருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் நிலக்கரி, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு ஆகியவற்றின் உற்பத்தி வளா்ச்சி முறையே 5.3 சதவீதம், 2.8 சதவீதம், 1.7 சதவீதம், 5.1 சதவீதம், 3.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் டிசம்பா் மாதத்தில் இது முறையே 10.8 சதவீதம், 4.1 சதவீதம், 5.9 சதவீதம், 8.3 சதவீதமாக இருந்தது.
எனினும், மதிப்பீட்டு மாதத்தில், சிமென்ட் மற்றும் மின்சார உற்பத்தி முறையே 4 மற்றும் 5.1 சதவீதமாக உயா்ந்துள்ளது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்த தொழில் வளா்ச்சியை அளவிடும் தொழிக உற்பத்தி குறியீட்டில் (ஐஐபி) எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் 40.27 சதவீத பங்களிப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.