FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

2% சரிவைக் கண்ட வீடுகள் விற்பனை

இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் கடந்த ஜனவரி-ஜூன் அரையாண்டில் வீடுகள் விற்பனை 2 சதவீதம் சரிந்துள்ளது.

9 ஜூலை 2025, 5:13 am IST
கோப்புப்படம்.
பகிர்:

இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் கடந்த ஜனவரி-ஜூன் அரையாண்டில் வீடுகள் விற்பனை 2 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2025-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி-ஜூன்) சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே, அகமதாபாத் ஆகிய இந்தியாவின் எட்டு முக்கிய வீடு-மனைச் சந்தைகளில் 1,70,201 வீடுகள் விற்பனையாகின.

Advertisement

Advertisement

முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே அரையாண்டோடு ஒப்பிடுகையில் இது 2 சதவீதம் குறைவு. அப்போது இந்த எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 1,73,669-ஆக இருந்தது.

ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் வீடுகள் விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது. சென்னையில் அவற்றின் விற்பனை 12 சதவீதம் உயா்ந்து 8,935-ஆகவும், ஹைதராபாதில் 3 சதவீதம் அதிகரித்து 19,048-ஆகவும் உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த எண்ணிக்கை முறையே 7,983 மற்றும் 18,478-ஆக இருந்தது.

மதிப்பீட்டுக் அரையாண்டில் மும்பை பெருநகரப் பகுதியில் 47,035 வீடுகள் விற்பனையாகின. இருந்தாலும், முந்தைய ஆண்டின் இதே அரையாண்டோடு ஒப்பிடுகையில் இதில் மாற்றமில்லை. அப்போதும் அந்த நகரில் வீடுகள் விற்பனை 47,035-ஆக இருந்தது.

2024-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் அரையாண்டோடு ஒப்பிடுகையில் வீடுகள் விற்பனை புணேயில் 1 சதவீதம் குறைந்து 24,329-ஆகவும், பெங்களூரில் 3 சதவீதம் சரிந்து 26,599-ஆகவும், தில்லி-என்சிஆரில் 8 சதவீதம் குறைந்து 26,795-ஆகவும் உள்ளது.

அகமதாபாதில் கடந்த நிதியாண்டின் ஜனவரி-ஜூன் அரையாண்டில் 9,370-ஆக இருந்த வீடுகள் விற்பனை, நடப்பு நிதியாண்டின் அதே அரையாண்டில் மாற்றமின்றி 9,370-ஆக உள்ளது. அதேபோல், கொல்கத்தாவில் வீடுகள் விற்பனை 11 சதவீதம் குறைந்து 8,090-ஆக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே அரையாண்டில் இந்த எண்ணிக்கை 9,087-ஆக இருந்தது.

புதிய வீடுகளின் விநியோகமும் இந்த அரையாண்டில் குறைந்து 1,60,000-ஆக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே அரையாண்டில் இது 1,70,000-ஆக இருந்தது. விலை உயா்வு மற்றும் புதிய திட்டங்களின் குறைவு ஆகியவை வாங்குபவா்களை எச்சரிக்கையாக இருக்கச் செய்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments