FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் 4வது காலாண்டு லாபம் 13% சரிவு!

எப்.எம்.சி.ஜி. நிறுவனமான, பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் லிமிடெட், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம், 13 சதவிகிதம் சரிந்து ரூ.30.98 கோடியானது.

5 மே 2025, 7:37 pm IST
பஜாஜ் கன்ஸ்யூமர் கேர்
பகிர்:

புதுதில்லி: எப்.எம்.சி.ஜி. நிறுவனமான, பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் லிமிடெட், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம், 13 சதவிகிதம் சரிந்து ரூ.30.98 கோடியானது.

இதுகுறித்து பஜாஜ் குழுமத்தின் ஒரு பகுதியான பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் தெரிவித்ததாவது:

கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் நிறுவனம் ரூ.35.58 கோடி லாபம் ஈட்டியது.

Advertisement

Advertisement

செயல்பாட்டு வருவாய் மூலம், 2025 மார்ச் காலாண்டில் இது 4.38% அதிகரித்து ரூ.250.49 கோடியாக இருந்தது. இதில் மொத்த செலவினம் 6.4 சதவிகிதம் அதிகரித்து ரூ.221.38 கோடியானது.

2025 நிதியாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு 19.4 சதவிகிதம் குறைந்து ரூ.125.26 கோடியாக இருந்தது. செயல்பாடுகள் மூலம் மொத்த வருவாய் 2024 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இது 1.96 சதவிகிதம் சரிந்து ரூ.964.82 கோடியாக உள்ளது.

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் நிறுவனமானது முக்கியமாக அதன் ஹேர் ஆயில் பிராண்டுகளான பாதாம் டிரொப், பஜாஜ் ப்யூர் தேங்காய் எண்ணெய், பிரம்மி அம்லா ஹேர் ஆயில் ஆகிய அழகு பராமரிப்பு பிரிவில் செயல்படுகிறது.

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் லிமிடெட் பங்குகள் இன்றைய மும்பை பங்குச் சந்தையில் 1.35 சதவிகிதம் உயர்ந்து ரூ.169.30 ஆக முடிந்தது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து 84.33 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments