டி-மார்ட் நிறுவனத்தின் 2வது காலாண்டு வருவாய் 18% உயர்வு!
டி-மார்ட் உரிமையாளரும் அதை நிர்வகித்து வரும் 'அவென்யூ சூப்பர் மார்ட்ஸ்' செப்டம்பர் 30 உடன் முடிவடைந்த 2வது காலாண்டில், அதன் வருவாய் 18.4 சதவீதம் வளர்ச்சி அடைந்ததாக அறிவித்தது.
புதுதில்லி: டி-மார்ட் உரிமையாளரும் அதை நிர்வகித்து வரும் 'அவென்யூ சூப்பர் மார்ட்ஸ்' செப்டம்பர் 30 உடன் முடிவடைந்த 2வது காலாண்டில், அதன் செயல்பாடு வருவாய் 18.4 சதவீத வளர்ச்சி அடைந்ததாக அறிவித்தது. இதன் மூலம் நிறுவனத்தின் வருவாய் ரூ. 19,206.18 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 16,218.79 கோடியாக இருந்தது. செப்டம்பர் 30 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான செயல்பாடுகள் மூலமான கிடைத்த வருவாய் ரூ. 19,206.18 கோடியாக இருந்தது.
தமாணி குடும்பத்தினரால் நடத்தப்படும் இந்த சில்லறை விற்பனைச் சங்கிலியின் மொத்தக் கடைகளின் எண்ணிக்கை, செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று 518 ஆக உள்ளது.
Advertisement
Advertisement
கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில், டி-மார்ட் வருவாய் 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜூன் காலாண்டில் டி-மார்ட் வருவாய் ரூ. 18,343.49 கோடியாக இருந்தது.
Avenue Supermarts, which owns and operates the retail chain D-Mart, reported an 18.4 per cent rise in revenue.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.