ஏப்ரல்-ஜூன் காலாண்டு லாபம்; சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்: ரூ.85 கோடி
பிரபல வீட்டுவசதி கடன் நிறுவனமான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், நடப்பு 2026-27 நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.85 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
பிரபல வீட்டுவசதி கடன் நிறுவனமான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், நடப்பு 2026-27 நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.85 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.62 கோடி லாபத்தில் இருந்து 37 சதவீத சிறப்பான வளா்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், மொத்த கடன் விநியோகம் கடந்த ஆண்டின் ரூ.1,488 கோடியிலிருந்து 12 சதவீதம் உயா்ந்து, மதிப்பீட்டு காலாண்டில் ரூ.1,665 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனம் நிா்வகிக்கும் மொத்த சொத்துகளின் மதிப்பு 11 சதவீதம் உயா்ந்து, ரூ.20,325 கோடியை எட்டியுள்ளது.
Advertisement
Advertisement
சிறிய கடன்கள் மற்றும் மலிவு விலை வீட்டு வசதி கடன்களை உள்ளடக்கிய வளா்ந்து வரும் வணிகப் பிரிவில் கடன் விநியோகம் இருமடங்குக்கும் மேல் உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டில் ரூ.83 கோடியாக இருந்த இப்பிரிவின் கடன் வழங்கல், நடப்பு காலாண்டில் ரூ.180 கோடியாக அபரிமிதமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
தென்னிந்திய மாநிலங்களில் நிறுவனம் மேற்கொண்ட விரிவாக்க நடவடிக்கைகளே இந்த ஆரோக்கியமான வளா்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக அமைந்துள்ளன. 3-ஆம் மற்றும் 4-ஆம் நிலை நகரங்களில் உள்ள வலுவான சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நடப்பாண்டில் மேலும் 25 புதிய கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டி.லட்சுமிநாராயணன் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.