தொடர்ந்து 2வது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை!!
சென்செக்ஸ் 249.70 புள்ளிகள் சரிந்து 76,478.67 புள்ளிகளாகவும், நிஃப்டி 80.50 புள்ளிகள் சரிந்து 23,865.75 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: தோஹாவில் நடைபெறவுள்ள அமெரிக்கா-ஈரான் இடையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் குறித்த நிச்சயமற்ற சூழலில், தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் & எரிவாயு மற்றும் குறிப்பிட்ட சில வங்கிப் பங்குகளில் மேற்கொள்ளப்பட்ட விற்பனை காரணமாக, பங்குச் சந்தையின் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவுபெற்றது.
வர்த்தக தொடக்கத்தில், சென்செக்ஸ் அதிகபட்சமாக 398.98 புள்ளிகள் சரிந்த பிறகு குறைந்தபட்சமாக 76,329.39 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 249.70 புள்ளிகள் சரிந்து 76,478.67 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 80.50 புள்ளிகள் சரிந்து 23,865.75 புள்ளிகளாக நிலைபெற்றது.
தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கி அதன் மந்தமான நகர்வும், புதிய வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியதும், ஐடி பங்குகளின் சரிவு உள்ளிட்டவையால் பங்குச் சந்தை சரிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, ஐடிசி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் சரிந்தும் மறுபுறம் மாருதி, டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் எடர்னல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.4 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடும் 1 சதவீதமும் உயர்ந்தன. துறைவாரியான செயல்பாடுகள் கலவையாக இருந்தாலும் சரிவை நோக்கியே பயணித்தது இந்திய பங்குச் சந்தை.
2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனங்களின் வருவாய் பலவீனமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பருவமழை போக்கு, கடந்த பத்தாண்டுகளில் இல்லாத மோசமான பற்றாக்குறையும், விவசாய உற்பத்தி மற்றும் அது சார்ந்த துறைகள் குறித்த அச்சத்தை மேலும் எழுப்பியுள்ளது.
ஆசியச் சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடுகள் உயர்வுடன் நிறைவடைந்த நிலையில் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு சரிவுடன் முடிவடைந்தன. ஐரோப்பியச் சந்தைகள் நேர்மறையான போக்கில் வர்த்தகமானது.
நேற்று அமெரிக்கச் சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன. இதில் எஸ்&பி 500 குறியீடு 1.18 சதவீதமும் உயர்ந்தன.
கேப்ரி குளோபல், ஏதர் எனர்ஜி, ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ், குஜராத் ஃப்ளோரோகெமிக்கல்ஸ், பீனிக்ஸ் மில்ஸ், கிருஷ்ணா இன்ஸ்டிடியூட், நுவாமா வெல்த், ரேடிகோ கைதான், கேப்லின் லேப்ஸ், ஃபெடரல் வங்கி, சாய் லைஃப் சயின்சஸ், ஆதித்யா இன்ஃபோடெக் உள்ளிட்ட 160 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தை எட்டியது.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ. 1,350.10 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.23 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 73.32 டாலராக உள்ளது.
Benchmark stock indices Sensex and Nifty declined on Tuesday due to selling in IT, oil & gas and select banking shares.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.