போர்ஷே கேயென் எலக்ட்ரிக் அறிமுகம்! விலை எத்தனை கோடி ?
போர்ஷே கேயென் எலக்ட்ரிக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் விவரம்
போர்ஷே நிறுவனம், தன்னுடைய கேயென் எலக்ட்ரிக் எஸ்.யு.வி. காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் ஆரம்பவிலை ரூ.177 கோடி மட்டுமே.
கார்களிலேயே சிறந்த செயல்திறனை மையமாகக் கொண்ட கயென் டர்போ எலக்ட்ரிக் (Cayenne Turbo Electric) மாடல் ரூ.1.77 கோடி முதல் ரூ.2.28 கோடி வரை இரண்டு மாடல்களில் வருகிறது.
இது போர்ஷேவின் முதன்மை எஸ்யூவி (SUV) வரிசையில் இரண்டு மாடல்களிலும் 1,156 பிஎஸ் ஆற்றல், 113 கேடபிள்யுஎச் பேட்டரி மற்றும் அதிவேக சார்ஜிங் வசதி ஆகியவற்றை வழங்குகிறது.
Advertisement
Advertisement
இந்த கார்களை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 642 கி.மீ. வரை பயணிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
செப். 30ஆம் தேதி இந்த கார் மும்பையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் ஆல்-வீல் டிரைவ் வசதியைப் பெறுகிறது.
இனி பெட்ரோல் கார்கள் இல்லையா?
பெட்ரோலில் இயங்கும் கயேன் மின்சார காராக மாறியிருப்பது அதன் ரசிகர்களுக்கு சில கேள்விகளை எழுப்புகிறது. ஆனால் கயேன் எலக்ட்ரிக் அறிமுகம் என்பது பெட்ரோலில் இயங்கும் எஞ்சின் கொண்ட கயேன் மாடல்களின் முடிவு என்று அர்த்தமல்ல என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த பத்தாண்டுகளுக்கு மின்சார மாடல்களுடன் பெட்ரோலில் இயங்கும் கயேன் வகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று போர்ஷே உறுதிப்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.