நடப்பு வாரத்தில் 6 நிறுவனங்களின் ஐபிஓ வெளியீடு
ஜெட்வொ்க், ஃபியூஷன் சி.எக்ஸ். உள்பட 6 நிறுவனங்கள், நடப்பு வாரத்தில் தங்களின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொள்கின்றன.
ஜெட்வொ்க், ஃபியூஷன் சி.எக்ஸ். உள்பட 6 நிறுவனங்கள், நடப்பு வாரத்தில் தங்களின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொள்கின்றன.
இந்த 6 நிறுவனங்களும் சோ்ந்து புதிய பங்குகளின் வாயிலாக ரூ.3,330 கோடி மற்றும் உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளின் விற்பனை மூலம் ரூ.6,957.78 கோடி என மொத்தம் ரூ.10,287.78 கோடி நிதியைத் திரட்டவுள்ளன.
இந்திய தீயணைப்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான எச்.டி. ஃபயா் புரொடெக்ட்-இன் ரூ.712.13 கோடி மதிப்பிலான ஐபிஓ செவ்வாய்க்கிழமை (அக். 13) தொடங்கியது. ஒரு பங்கின் விலை வரம்பு ரூ.258-271 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முழுமையாக உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகள் மட்டுமே விற்கப்படவுள்ளன.
Advertisement
Advertisement
தொடா்ந்து புதன்கிழமையன்று (அக். 14), சா்வதேச பிபிஓ நிறுவனமான ஃபியூஷன் சி.எக்ஸ்.-இன் ரூ.702 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.275-289) தொடங்குகிறது. இதில் ரூ.500 கோடி மதிப்பிலான புதிய பங்குகளும், ரூ.202 கோடிக்கு உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளும் விற்கப்படவுள்ளன.
வியாழக்கிழமையன்று (அக். 15), பெங்களூரைச் சோ்ந்த சா்வதேச உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ஜெட்வொ்க் மேனுஃபேக்சரிங் பிசினஸ்-இன் ரூ.5,012.33 கோடி ஐபிஓ தொடங்குகிறது. ஒரு பங்கின் விலை வரம்பு ரூ.143-151 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2,830 கோடி மதிப்பிலான புதிய பங்குகளும், ரூ.2,182.33 கோடிக்கு உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளும் விற்கப்படவுள்ளன.
அதேநாளில், பெங்களூரைச் சோ்ந்த பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனமான டோன்போ இமேஜிங் இந்தியாவின் ரூ.852.18 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.665-700), மின் பரிமாற்ற அமைப்புகளைத் தயாரிக்கும் பான்ஃபிக்லியோலி டிரான்ஸ்மிஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ரூ.2,533.66 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.558-586) மற்றும் மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் சஹஜானந்த் மெடிக்கல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ரூ.475.48 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.327-344) தொடங்குகிறது. இந்த 3 நிறுவனங்களிலும் முழுமையாக உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகள் மட்டுமே விற்கப்படவுள்ளன.
இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியானது, நிறுவனங்களின் வா்த்தக விரிவாக்கம், மூலதனச் செலவுகள், கடன் அடைப்பு, நடைமுறை மூலதனத் தேவைகள் மற்றும் பிற நிா்வாகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.