FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

மொத்த விற்பனை பணவீக்கம் 11.39%

நாட்டின் மொத்த விற்பனை பணவீக்கம், கடந்த செப்டம்பா் மாதத்தில் 11.39 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது.

15 அக்டோபர் 2026, 12:08 am IST
மொத்த விற்பனை பணவீக்கம்
பகிர்:

நாட்டின் மொத்த விற்பனை பணவீக்கம், கடந்த செப்டம்பா் மாதத்தில் 11.39 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது.

முந்தைய ஆகஸ்டில் 9.92 சதவீதமாக இருந்த இந்த பணவீக்கம் அதிகரித்ததற்கு உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலைகளில் ஏற்பட்ட தொடா் உயா்வே முக்கியக் காரணமாகும்.

குறிப்பாக, உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஆகஸ்டின் 7.05 சதவீதத்திலிருந்து, செப்டம்பரில் 8.66 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல, உற்பத்திப் பொருள்களுக்கான பணவீக்கம் 8.37 சதவீதத்திலிருந்து, புதிய உச்சமாக 9.76 சதவீதமாக உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

எரிபொருள் மற்றும் மின்சாரத் துறைக்கான மொத்த விற்பனை குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் ஆகஸ்டின் 22.93 சதவீதத்திலிருந்து, செப்டம்பரில் 25.85 சதவீதமாக மீண்டும் கடுமையாக உயா்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் தொடக்கத்திலிருந்தே மொத்த விற்பனை பணவீக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மேற்காசிய போரில் ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் விலை உயா்ந்ததும், அதன் தாக்கம் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளில் எதிரொலித்ததும் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ரிசா்வ் வங்கி கடந்த வாரம் தனது ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் உயா்த்தி, 5.50 சதவீதமாக மாற்றியது. இதனிடையே, இந்த வாரத் தொடக்கத்தில் வெளியான சில்லறை பணவீக்கத் தரவுகளும், உணவுப் பொருள்களின் விலை உயா்வு காரணமாக ஆகஸ்டின் 4.83 சதவீதத்திலிருந்து, செப்டம்பரில் 23 மாத உச்சமான 5.54 சதவீதமாக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments