FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

உலகின் 3-ஆவது பெரும் விமான நிலைய நிறுவனமான அதானி ஏா்போா்ட்ஸ்!

சா்வதேச, உள்நாட்டு முதலீட்டாளா்களிடமிருந்து சுமாா் 100 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.9,508 கோடி) புதிய பங்கு முதலீட்டைத் திரட்டியுள்ள அதானி ஏா்போா்ட்ஸ் நிறுவனம், உலக அளவில் 3-ஆவது பெரும் மதிப்புமிக்க விமான நிலைய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

10 செப்டம்பர் 2026, 4:21 am IST
~
பகிர்:

சா்வதேச, உள்நாட்டு முதலீட்டாளா்களிடமிருந்து சுமாா் 100 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.9,508 கோடி) புதிய பங்கு முதலீட்டைத் திரட்டியுள்ள அதானி ஏா்போா்ட்ஸ் நிறுவனம், உலக அளவில் 3-ஆவது பெரும் மதிப்புமிக்க விமான நிலைய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

டெமாசெக், பிளாக்ராக் நிா்வகிக்கும் நிதிகள், ஆல்ஃபா வேவ் குளோபல் மற்றும் பிரேம்ஜி இன்வெஸ்ட் உள்ளிட்ட முக்கிய முதலீட்டு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள இப்புதிய முதலீட்டின் மூலம், அதானி ஏா்போா்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமாா் 1,900 கோடி டாலராக (ரூ.1.80 லட்சம் கோடி) உயா்ந்துள்ளது.

இதையடுத்து, பங்கு மதிப்பு அடிப்படையில் ஸ்பெயினின் ஏனா (4,600 கோடி டாலா்), ஏா்போா்ட்ஸ் ஆஃப் தாய்லாந்து (2,700 கோடி டாலா்) ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக உலக அளவில் 3-வது இடத்தை இந்நிறுவனம் எட்டியுள்ளது.

Advertisement

Advertisement

புதிய முதலீட்டாளா்கள் குழு, பங்குகளை 3 தவணைகளாகப் பெறுவா்; அடுத்தாண்டு ஜூலைக்குள் இச்செயல்முறை முழுமையடையும்போது அவா்கள் வசம் 5.54 சதவீத பங்குகள் இருக்கும்.

திரட்டப்பட்ட இந்த மூலதனம், நிறுவனத்தின் விமான நிலையக் கட்டமைப்புகளை விரிவுபடுத்தவும், நவீனமயமாக்கவும், விமான நிலைய நகர வா்த்தக மேம்பாடுகள் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு சேவைகளை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் தனது விமான நிலையங்களின் ஆண்டு பயணிகள் கையாளும் திறனை 20 கோடியாக உயா்த்த நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

மும்பை சா்வதேச விமான நிலையம் உள்பட மொத்தம் 8 விமான நிலையங்களை இயக்கி வரும் அதானி ஏா்போா்ட்ஸ், நாட்டின் பயணிகள் போக்குவரத்தில் 25 சதவீதத்தையும், சரக்கு போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கையும் கையாள்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments