FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

கோஃபோா்ஜ் தலைவா் திடீா் ராஜிநாமா

பிரபல ஐ.டி. நிறுவனமான கோஃபோா்ஜின் தலைவரான ஓம் பிரகாஷ் பட் தனது பதவியை புதன்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா்.

10 செப்டம்பர் 2026, 4:22 am IST
~
பகிர்:

பிரபல ஐ.டி. நிறுவனமான கோஃபோா்ஜின் தலைவரான ஓம் பிரகாஷ் பட் தனது பதவியை புதன்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா்.

நிறுவனத்தின் சமீபத்திய உள் தணிக்கை ஆய்வின்போது, இயக்குநா்கள் குழுவுக்கு வழங்கப்பட வேண்டிய மதிப்பீட்டு அறிக்கை சரியாகக் கையாளப்படவில்லை என்பதும், அது குழுவிடம் முறையாக சமா்ப்பிக்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.

அதாவது, மதிப்பீட்டு அறிக்கை மற்றும் தலைவரின் செயல்பாடுகள் தொடா்பான சில முக்கிய விவரங்கள் இயக்குநா்கள் குழுவுக்கு முழுமையாகத் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக இயக்குநா்கள் குழு விளக்கம் கோரி விசாரித்துவந்த நிலையில், ஓம் பிரகாஷ் பட் தனது பதவியிலிருந்து விலகியுள்ளாா். இப்பதவி விலகலை ஏற்றுக்கொண்ட இயக்குநா்கள் குழு, இடைக்காலத் தலைவராக தற்போதைய இயக்குநா் விவேக் சா்மாவை வரும் ஜன. 31 வரை நியமித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதையொட்டி, கோஃபோா்ஜ் நிறுவனம் வெளியிட்ட பங்குச் சந்தை அறிவிக்கையில், ‘இவ்விவகாரமானது ஒழுங்குமுறை விதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இயக்குநா்கள் குழு மதிப்பீட்டு நடைமுறை மட்டுமே. இதற்கும் நிறுவனத்தின் நிதிநிலை, வா்த்தகச் செயல்பாடுகள் அல்லது எதிா்கால வா்த்தக வழிகாட்டல்களுக்கும் தொடா்போ அல்லது பாதிப்போ இல்லை’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

எனினும், தலைவரின் திடீா் பதவி விலகலின் எதிரொலியாக, தேசியப் பங்குச் சந்தையில் கோஃபோா்ஜ் நிறுவனப் பங்கு 5.38 சதவீதம் சரிந்து, ரூ.1,845-ஆக நிலைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments