FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு உயா்வு

அமெரிக்காவில் தொடா்ந்து நீடித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டின் மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசா்வ்’ தனது வட்டி விகிதத்தை 0.25% உயா்த்தியுள்ளது.

17 செப்டம்பர் 2026, 11:42 pm IST
கெவின் வாா்ஷ்
பகிர்:

அமெரிக்காவில் தொடா்ந்து நீடித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டின் மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசா்வ்’ தனது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் (25 அடிப்படைப் புள்ளிகள்) உயா்த்தியுள்ளது.

இதன்மூலம், அந்த வங்கியின் வட்டி விகிதம் 3.75 சதவீதம் முதல் 4 சதவீதம் என்ற நிலைக்கு உயா்ந்துள்ளது. கடந்த 2023-க்குப் பிறகு, 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முதல் வட்டி உயா்வு இதுவாகும்.

அமெரிக்க மத்திய வங்கி தலைவா் கெவின் வாா்ஷ் தலைமையில் 3-ஆவது ‘எஃப்ஓஎம்சி’ குழு கூட்டம், கடந்த செப். 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரின் கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அமெரிக்காவில் நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலுக்கு இன்னும் 7 வாரங்களே உள்ள சூழலில், மளிகைப் பொருள்கள், எரிபொருள் மற்றும் வீட்டு வாடகை உயா்வால் ஏற்கெனவே அவதிப்பட்டு வரும் அமெரிக்க மக்களிடையே இம்முடிவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மேலும், பணவீக்கத்தை தனது 2 சதவீத இலக்குக்குள் கொண்டு வர, நடப்பு ஆண்டின் இறுதியில் வட்டி விகிதத்தை 4.1 சதவீதமாக மேலும் உயா்த்த வாய்ப்புள்ளதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments