பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...
இந்த வாரத்தின் முதல் நாளான இன்று (செப். 28) இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,734.83 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.50 மணியளவில் சென்செக்ஸ் 1,005.48 புள்ளிகள் சரிந்து 72,892.71 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 317.35 புள்ளிகள் சரிந்து 22,823.15 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
Advertisement
Advertisement
நிஃப்டி50 குறியீட்டில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், மேக்ஸ் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட், கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை அதிக சரிவைச் சந்தித்த நிறுவனங்களாக இருந்தன.
பரந்த சந்தைகளில், நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் முறையே 1.32 சதவீதம், 1.39 சதவீதம் சரிந்தன.
துறைவாரியாக, நிஃப்டி தனியார் வங்கி பங்குகள் மிகவும் சரிந்தது, அதே நேரத்தில் நிஃப்டி ஐடி மிகக் குறைந்த சரிவுடன் சிறப்பாகச் செயல்பட்டது.
Stock Market: Sensex slumps 1,000 pts, Nifty below 23,850; NSE shares down over 1 percent
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.