FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!

இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு.

இந்திய ரூபாய்
பகிர்:

மும்பை: டாலர் குறியீட்டில் ஏற்பட்ட சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உச்ச நிலையிலிருந்து சற்று சரிந்ததால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிலைபெற்றது.

அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் குறைந்ததும், ரூபாயின் மதிப்பு உயர உதவியதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருப்பினும், உள்நாட்டுச் சந்தைகளில் நிலவிய மந்தநிலை இந்திய ரூபாயின் கணிசமான உயர்வைக் கட்டுப்படுத்தியது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாயின் மதிப்பு ரூ. 95.87 ஆக வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகான வர்த்தகத்தில் சரிந்து, வர்த்தகத்தின் இடையே ரூ. 95.98 என்ற குறைந்தபட்ச நிலையை எட்டியது. வர்த்தக முடிவில், முந்தைய நாள் நிலையை விட 13 காசுகள் உயர்ந்து, டாலருக்கு நிகராக ரூ. 95.81 ஆக நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூபாயின் மதிப்பு ரூ. 95.94 ஆக இருந்தது.

summary

The rupee appreciated 13 paise to close at 95.81 against the dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments