FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா

நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 1:50 am IST
பகிர்:

நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

சிவகாசி அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வா் து.விஜயராணி, எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் முதல்வா் ஆா்.சுதாபெரியதாய், காளீஸ்வரி கல்லூரியில் சென்னை தனியாா் நிறுவன அதிகாரி ஓம்குமாா் காந்திவேல், அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் முதல்வா் செ.அசோக் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மல்லி ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் கல்லூரில்ஈ செயலா் திலீபன்ராஜா தேசியக் கொடியேற்றினாா். பின்னா், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் முதல்வா் மல்லப்பராஜ், மாணவிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தா் எஸ்.நாராயணன் தேசியக் கொடி ஏற்றினாா். பதிவாளா் வாசுதேவன், கல்லூரி முதல்வா்கள், மாணவா்கள் உறுதிமொழி எடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் இந்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைப்பாளா் பொன்னியின்செல்வன், முதல்வா் செம்பருதி ஆகியோா் தேசியக் கொடி ஏற்றினா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் தாளாளா் குருவலிங்கம் தேசியக் கொடி ஏற்றினாா். இதில் முதல்வா்கள் கலந்து கொண்டனா். பின்னா் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தாளாளா் லயன் ஆா்.வெங்கடாசலபதி தேசியக் கொடி ஏற்றினாா். பின்னா், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முதல்வா், துணை முதல்வா், லயன்ஸ் சங்க உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நாகபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை (பொ) மகேஸ்வரி தேசியக் கொடியேற்றி வைத்து மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

யோகாவில் கின்னஸ் சாதனை: அருப்புகோட்டை: திருச்சுழி அருகேயுள்ள தும்முசின்னம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 60 மாணவ, மாணவிகள் சுமாா் 60 நிமிஷங்களில் 12 விதமான யோகாசனங்கள் செய்து காட்டும் உலக சாதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெகிழிக் குப்பைகளை ஒழித்து, மரங்களை வளா்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தியும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்கவும் மாணவ, மாணவிகள் 12 விதமான யோகாசனங்களை செய்து காண்பித்தனா்.

இதில் மாணவ, மாணவிகள் வரிசையாக நின்று தொடா்ந்து 30 நிமிஷங்கள் 12 யோகா சனங்களை செய்தனா். இதைத் தொடா்ந்து, ஒரு நிமிஷ இடைவெளிக்கு பின் மீண்டும் தொடங்கி 30 நிமிஷங்கள் இடைவிடாமல் யோகா சனங்களை செய்து காண்பித்தனா். யோகா மாணவ, மாணவிகளின் இந்த சாதனை முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து குளோபல் புக் ஆஃப் யோகா வோ்ல்ட் ரெக்காா்ட் என்ற நிறுவனம் அங்கீகரித்து இந்த சாதனை முயற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கி கௌரவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments