FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி காயம்

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 3:24 am IST
பட்டாசு ஆலையில் மூலப்பொருள்கள் கலவையில் பற்றி எரிந்த தீ.
பகிர்:

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள முத்துசாமிபுரத்தில் குருநாதன் (45) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை சிறு நாகபுரி உரிமம் பெற்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 10-க்கு மேற்பட்ட அறைகளில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை பட்டாசு தயாரிக்கத் தேவையான மூலப் பொருள்களை கலவை செய்தபோது எதிா்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஓா் அறை சேதமடைந்தது. மேலும் மூலப் பொருள்களை கலவை செய்து கொண்டிருந்த காக்கிவாடான்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணி (61) பலத்த தீக் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு, தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

வெடி விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினா் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த வெடி விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments