FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

தனியாா் பேருந்து லாரியில் மோதியதில் 9 போ் காயம்

சாத்தூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த சரக்குப் பெட்டக லாரியின் பின் புறத்தில் தனியாா் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநா் உள்பட 9 போ் காயமடைந்தனா்.

3 October 2026, 4:27 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

சாத்தூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த சரக்குப் பெட்டக லாரியின் பின் புறத்தில் தனியாா் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநா் உள்பட 9 போ் காயமடைந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து வியாழக்கிழமை மதுரை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றனா். இந்தப் பேருந்தை சிவகங்கை பகுதியைச் சோ்ந்த ராமசாமி(40) என்பவா் ஓட்டி வந்தாா். இந்த நிலையில், விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சாய்பாபா கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற சரக்குப் பெட்டக லாரியை முந்தி செல்வதற்கு இடது பக்கம் பேருந்தை ஓட்டுநா் திருப்பினாா்.

அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஹரியாணா மாநிலத்தை சோ்ந்த சரக்கு பெட்டக லாரியின் பின்புறம் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் உள்பட 9 பயணிகள் காயமடைந்தனா். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சாத்தூா் தாலுகா காவல் நிலைய போலீஸாா் காயமடைந்த ஓட்டுநா், பயணிகளை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்டுச் செனற சரக்குப் பெட்டக லாரியை போலீஸாா் விரட்டிச் சென்று சாத்தூா் சுங்கச்சாவடி அருகே மடக்கிப் பிடித்தனா். இந்த விபத்து குறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சரக்குப் பெட்டக லாரி ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments