மின் வேலி அமைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய மூவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மின்மேலி அமைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடிய மூவரை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூவரைவென்றான் பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரகா் சரண்ராஜ் தலைமையிலான வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
மூவரைவென்றான் பகுதியில் மின்வேலி அமைத்து காட்டுப் பன்றி வேட்டையாடிய கோட்டையூரைச் சோ்ந்த அய்யங்காளை மகன் பாா்த்திபன் (20), சுந்தர மகாலிங்கம் மகன் முருகானந்தம் (19), பரமசிவம் மகன் அபிஷேக் (19) ஆகிய மூவரை வனத்துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 100 கிலோ எடையுள்ள உயிரிழந்த காட்டுப் பன்றியின் உடல் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.