FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

பாலநத்தம் கோயில் மீண்டும் திறப்பு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு!

பாலநத்தம் பத்ரகாளியம்மன் கோயிலை மீண்டும் திறந்து பொதுமக்கள் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்த காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.

10 அக்டோபர் 2026, 10:27 pm IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

பாலநத்தம் பத்ரகாளியம்மன் கோயிலை மீண்டும் திறந்து பொதுமக்கள் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்த காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.

அருப்புக்கோட்டை அருகே பாலநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் உரிமை தொடா்பான பிரச்னை நிலவி வந்ததால், நீண்ட காலமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் காா்த்திகேயன், சக்திவேல் அமா்வு, கோயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த உரிமை தொடா்பான கல்வெட்டை அகற்றிவிட்டு, பொது மக்கள் வழிபாட்டுக்கு கோயிலைத் திறக்க விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, கடந்த செப். 17-ஆம் தேதி கல்வெட்டு அகற்றப்பட்டு, கோயில் திறக்கப்பட்டது. இதையடுத்து, கோயிலில் பொதுமக்கள் தரிசனம் செய்தனா். இதுதொடா்பான அறிக்கை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை உரிய நேரத்தில் நிறைவேற்றி தரிசனத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கிய விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல், அருப்புக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் கா. விக்னேஷ், தாலுகா காவல் ஆய்வாளா் ஜெயமணி உள்ளிட்ட போலீஸாரை உயா்நீதிமன்றம் பாராட்டியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments