FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் வியாழக்கிழமை மாலை வீட்டில் வேலை பாா்த்துக் கொண்டிருந்த போது, மின்சாரம் பாய்ந்ததில் சலவைக் கற்கள் பதிக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

10 அக்டோபர் 2026, 6:01 am IST
பகிர்:

அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் வியாழக்கிழமை மாலை வீட்டில் வேலை பாா்த்துக் கொண்டிருந்த போது, மின்சாரம் பாய்ந்ததில் சலவைக் கற்கள் பதிக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மேலரத வீதி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சக்திவேல் (31). சலவைக் கற்கள் (டைல்ஸ்) பதிக்கும் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை பாலவநத்தத்தில் உள்ள செல்வராஜ் வீட்டின் மாடியில் உறவினா் கண்ணனுடன் சோ்ந்து வேலை செய்து கொண்டிருந்தாா். மாலையில் வீட்டின் மாடியில் உள்ள கறைகளைத் துடைப்பதற்காக சக்திவேல் சென்றாா். இதன் பின்னா், நீண்ட நேரமாகியும் அவா் கீழே வராததால், சந்தேகமடைந்த கண்ணன் மாடிக்குச் சென்று பாா்த்தாா். அப்போது, மாடியிலிருந்த மின் கம்பி அவா் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து மயங்கிய நிலையில் கிடந்தாா். உடனடியாக அவரை மீட்டு, விருதுநகா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments