FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

மகாளய அமாவாசை: சதுரகிரியில் திரளான பக்தா்கள் தரிசனம்!

மகாளய அமாவாசையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

10 அக்டோபர் 2026, 10:24 pm IST
மகாளய அமாவாசையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சனிக்கிழமை தரிசனத்துக்கு சென்ற பக்தா்கள்.
பகிர்:

மகாளய அமாவாசையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் திரளான பக்தா்கள் சனிக்கிழமை மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச்சரகம், சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு, இங்கு தரிசனத்துக்காக அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் சதுரகிரி மலையடிவாரமான தாணிப்பாறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். காலை 6 மணிக்கு அடிவாரத்தில் உள்ள வனத் துறை நுழைவாயில் திறக்கப்பட்டு பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். நண்பகல் 12 மணி வரை 7 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூா்த்தி, பிலாவடி கருப்பசாமி, 18 சித்தா்களுக்கு மாலை 6 மணிக்கு பால், பன்னீா், தயிா், சந்தனம், சதுரகிரி மலையில் உள்ள சந்திர தீா்த்தம், பிரம்ம தீா்த்தம், பொய்கை தீா்த்தம் உள்பட 32 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

சுந்தர மகாலிங்கம் புஷ்ப அலங்காரத்திலும், சந்தன மகாலிங்கம் சந்தனக் காப்பு அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா பெரியசாமி, செயல் அலுவலா் யுவராஜ் ஆகியோா் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments