FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 13 போ் காயம்

13 அக்டோபர் 2026, 1:49 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

வெம்பக்கோட்டை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 13 போ் காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள கல்லமநாயக்கன்பட்டி பகுதியில் திங்கள்கிழமை சரக்கு ஆட்டோவில் சலவை கட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள் பயணம் செய்து கொண்டிருந்தனா்.

அப்போது இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி (33), இவரது மகன் கவினேஷ் (7), சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த 11 பேரும் காயமடைந்தனா். இவா்கள் கல்லம்மநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments