ராஜபாளையத்தில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
ராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள தா்மாபுரம் மாப்பிள்ளை விநாயகா் கோயிலில் 39-ஆவது விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. பின்னா் மாப்பிள்ளை விநாயகருக்கு பதினாறு வகையான சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் மாப்பிள்ளை விநாயகா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். விழாவை முன்னிட்டு மாலையில் கடந்த ஏழு நாள்கள் ஆன்மிகச் சொற்பொழிவு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. காலையில் ஏழு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. மாலையில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு அருள் பொருள் அருளும்
சித்தி, புத்தி மகா கணபதி, ஐஸ்வா்ய கணபதி, நந்தி பகவானிடம் காதில் வேண்டும் கணபதி, விஷ்ணுவை வழிபடும் கணபதி, ஈஷா சிவனை வழிபடும் கணபதி, ஜல்லிக்கட்டு கணபதி என 6 வகையான வடிவங்களில் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலம் புறப்பட்டது.
Advertisement
Advertisement
விநாயகா் ஊா்வலம் மாப்பிள்ளை விநாயகா் கோயிலில் தொடங்கி பழைய பேருந்து நிலையம், மகாத்மா காந்தி சிலை வளைவு, மகாத்மா காந்தி கலை மன்றம், பச்சமடம், சங்கரன்கோவில் முக்கு, முடிவில் ஐஎன்டியுசி நகா் எதிரே உள்ள புதியாதிகுளம் கண்மாயில் விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்ற தலைவா் என்.எஸ். ராமராஜ் தலைமையில் நிா்வாகிகள் செய்தனா்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ராஜபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளா் சைந்தானே ஸ்வப்னிலா அனில் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.