பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளி பலி!
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சாத்தூரை அடுத்த தாயில்பட்டியில் உள்ள ராமமூா்த்திக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஆலையில் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி வேலுச்சாமி (58) பலத்த காயமடைந்தாா். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது தொடா்பாக, ஆலை உரிமையாளா் ராமமூா்த்தி, மேலாளா் முத்துக்கனி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்த நிலையில், முத்துக்கனியை ஏற்கெனவே கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.