FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

தகரக் கொட்டகையில் பட்டாசு தயாரித்தவா் கைது

21 செப்டம்பர் 2026, 12:44 am IST
கைது
பகிர்:

சிவகாசி அருகே தோட்டத்தில் தகரக் கொட்டகை அமைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே அனுப்பன்குளம் கிராமத்தில் தோட்டத்தில் தகரக் கொட்டகை அமைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். இதில், இதே ஊரைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சுரேஷ் (31) உள்ளிட்ட பல தொழிலாளா்கள் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

அப்போது போலீஸாரைக் கண்டதும் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தவா்கள் தப்பியோடி விட்டனா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்து, அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள், மூலப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments